Tuesday, 12 September 2017

சிறிய உதவி பெரிய நன்மை


சீதையை மீட்க, கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்ல பாலம் அமைக்கப்பட்டது. இதில் அணில் ஒன்றும் ஈடுபட்டதாக செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாலவேலை நடந்த இடத்தில் இருந்த அணில், வானரங்களோடு சேர்ந்து பணிசெய்து ராமபிரானின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று எண்ணியது. கடல் நீரில் மூழ்கி, கடற்கரை மணலில் புரண்டு எழுந்தது. ஈரவுடம்பில் ஒட்டிக் கொண்ட மணலை குரங்குகள் போட்ட பாறையில் உதிர்த்துவிட்டு வந்தது. இப்படி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்த அணிலின் செயலை கவனித்தார் ராமன். அன்போடு அதன் முதுகில் தனது கைகளால் தடவிக் கொடுத்தார். அது அணிலின் முதுகில் மூன்று கோடுகளாக விழுந்தன. அன்றுமுதல் அணில் ராமபிரானுக்கு மட்டுமல்ல, நமக்கும் அன்பிற்குரிய பிராணியாகிவிட்டது. காலத்தால் செய்யும் சிறிய உதவியும் மிகப்பெரிதாகப் போற்றப்படும் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்ச்சி.

No comments:

Post a Comment