Sunday 19 November 2017

நங்கநல்லூர் லட்சுமிநரசிம்மர்

நங்கநல்லூர் லட்சுமிநரசிம்மர்

நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயத்தில் மகாலட்சுமி (நங்கை) இங்கு குடிகொண்டிருப்பதால் இந்த ஆலயம் நங்கைநல்லூர் என்றாகி, அதுவே மருவி நங்கநல்லூர் என்றானதாக கூறப்படுகிறது.

சென்னை நங்கநல்லூரில் நரசிம்மர் ஆலயம் ஒன்று உள்ளது. மகாலட்சுமி (நங்கை) இங்கு குடிகொண்டிருப்பதால் இந்த ஆலயம் நங்கைநல்லூர் என்றாகி, அதுவே மருவி நங்கநல்லூர் என்றானதாக கூறப்படுகிறது. 

இந்த லட்சுமி நரசிம்மர் கோவில் காலப்போக்கில் புதையுண்டு போனது. பின்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டு, வழிபாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஆலயம் முற்காலத்தில் ‘தட்சிண திபாலயா’ என்று அழைக்கப்பட்டதாகவும், பரசுராமனின் தந்தை ஜமதக்னி முனிவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நரசிம்மர் இங்கு கோவில் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இங்குள்ள சக்கரத்தாழ்வார் தனது 16 கரங்களிலும் ஆயுதங்களைத் தாங்கி காட்சி தருகிறார். இந்த 16 ஆயுதங்களும், 16 வகையான செல்வங்களைக் குறிப்பதாகும். சக்கரத்தாழ்வாருக்குப் பின்னால் யோக நரசிம்மர் விக்ரகம் உள்ளது. இத்தல லட்சுமி நரசிம்மர் 5 அடி உயர சிலை வடிவில் அருள்கிறார். இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்ஹாரம் செய்ததால், இங்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment