‘சிவ’ என்ற இரண்டு எழுத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும், எந்த பிறவி வந்தாலும் அதை மறக்காமல் கூறினால், பிறவியே இல்லாத அமைதியான நிலை ஏற்படும்.
* ஒரு பிறவியில் செய்த பாவத்தை மற்றொரு பிறவியில் தீர்த்துக் கொள்ளட்டும் என்பதற்காக, ஈஸ்வரன் கருணையுடன் மறுபடியும் பிறவியைத் தருகிறான்.
* பகவானிடம் பக்தி உண்டாகவும், அவனது அருள் கிடைக்கவும் முதலில் பிறருக்கு உதவி செய். மனம் பக்குவமடைந்தால் உண்மையான பக்தியும், ஈஸ்வரனின் அருளும் கிடைக்கும்.
* தேசப்பணி, சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு முன் சமூக சேவையை, தெய்வப்பணியுடன் இணைத்து செய்ய வேண்டும். தெய்வ சம்மதத்துடன் தேசப்பணி செய்யவது நல்லது.
* கோபம், கெட்ட எண்ணம் போன்றவை இல்லாத சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.
* ஈஸ்வரனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவன் ஒருவன் இருந்தாலும், அவன் மூலமாகத் தேசம் நலமடையும். அப்போது எது வந்தாலும் பயமில்லை.
* ‘சிவ’ என்ற இரண்டு எழுத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும், எந்த பிறவி வந்தாலும் அதை மறக்காமல் கூறினால், பிறவியே இல்லாத அமைதியான நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment