Saturday 11 November 2017

பணமில்லாமல் தங்கம்


கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு. திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது "கோவிந்தா' என்னும் நாமம். முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது "ஆதிமூலம்' என்ற திருநாமம். கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கத்தை சுரங்கத்தில் வெட்டி எடுத்தாலும் அப்படியே பயன்படுவதில்லை. கலைநுட்பம் மிக்க கலைஞரின் கையில் பட்டு ஆபரணமாக மாறினால் தான், அதன் மதிப்பும் மெருகும் கூடுகிறது. ஊரும், பேருமில்லாமல் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரே நமக்காக வடிவம் தாங்கி ராமர், கிருஷ்ணர் என்ற திருநாமம் கொண்டு அவதரிக்கிறார். "கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம்' என்று இதனைச் சொல்வதுண்டு. ஆபரணத்தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.

No comments:

Post a Comment