Tuesday 7 November 2017

காருகுறிச்சி அழகியசிங்கர்


ஆந்திராவில் உள்ள அகோபிலம் நரசிம்ம ஆராதனைக்குப் புகழ்பெற்றது. இங்கு நாற்பதாவது ஜீயராக இருந்தவர் ரங்கநாத சடகோப யதீந்திரதேசிகர். இவரை காருகுறிச்சி அழகியசிங்கர் என்று குறிப்பிடுவர். 1851, மார்கழிமாதம், விசாக நட்சத்திரத்தில் திருநெல்வேலி அருகிலுள்ள காருகுறிச்சியில் பிறந்தார். வேங்கடகிருஷ்ணமாச்சார்யார் என்பது இவரது நிஜப்பெயர். 1913 ஏப்ரலில் அகோபிலமடத்தின் ஆஸ்தானப் பெறுப்பேற்றுக் கொண்டார். அக்காலத்தில் அகோபிலம் ÷க்ஷத்திரத்திற்கு யாரும் போவதில்லை. மந்திரசித்தி பெற்ற இவர் அங்கிருந்த பிரம்மராட்சஷர், ஜடாமுனிகளை விரட்டினார். இதன்பின், பக்தர்கள் அகோபிலம் வந்து நவ நரசிம்மரை வழிபடத் தொடங்கினர். 1923ல் யாத்திரையாக வந்து மதுரை கூடலழகரைத் தரிசித்தார். அப்போது துவரிமான் பகுதியில் தங்கியபோது நோய்வாய்ப்பட்டார். கோபால ராமபத்ராச்சார்யாரிடம் ஆஸ்தானப் பொறுப்பேற்கச் செய்துவிட்டு 1923 ஜனவரி 14ல் பரமபதம் அடைந்தார்.

No comments:

Post a Comment