Wednesday 8 November 2017

இரட்டை ஜடை கூடாது சொல்கிறது சாஸ்திரம்

Related image

"காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன் சென்றாள் என் மகள். இன்னும் தலைவாரி முடியவில்லை. அவிழ்த்து அவிழ்த்து ஒவ்வொரு ஸ்டைலில் கட்டிப் பார்க்கிறாள்...எப்போ முடியப்போகுதோ இந்த சிகை அலங்காரம்,''என்று புலம்புகிற தாய்மார்கள் ரொம்பவே பெருகி விட்டார்கள். இவர்கள் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று, விதவிதமாக கத்தரித்துக் கொள்கிறார்கள். கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமென்று விஷ்ணுபுராணத்தில் பராசர மகரிஷியே சொல்லியிருக்கிறார். சிகை அலங்காரம் பற்றி அவர் சொல்வதைக் கேளுங்கள். பெண்கள் நேர்வகிடு எடுத்துக்கொள்ள வேண்டும். கோணல் வகிடு கூடாது. கூந்தலை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடக்கூடாது. இதனால், குடும்பம் இரண்டுபடும் (பல பள்ளிகளில் இரட்டை ஜடை இன்றும் இருக்கிறது...சாஸ்திரம் தெரியாததால்) கூந்தலை அவிழ்த்துப் போடக்கூடாது. குளித்ததும், ஈரம் சொட்டச்சொட்ட வீட்டுக்குள் வரக்கூடாது. துடைத்து துவட்டி வர வேண்டும். ""வேற வேலையில்லே! காலம் போகிற போக்கிலே இதையெல்லாம் கவனிக்க முடியுமா!'' என்பவர்களுக்கு "பாஷாண்டிகள்'' என்று பட்டப்பெயர் வைத்துள்ளது சாஸ்திரம். (இதிலிருந்து தான் "பேஷன்' என்ற ஆங்கிலச்சொல் வந்ததோ!) இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இறையருள் இல்லாதவர்கள், நாத்திகம் பேசுபவர்கள்'. இவர்களுக்கு தன்னை வணங்கும் பாக்கியத்தை ஆண்டவன் தரமாட்டான் என்கிறார் பராசர மகரிஷி.

No comments:

Post a Comment