Wednesday 1 November 2017

முறைப்பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் அவசியமா ?

Image result for jathagam

ஜோதிட ரீதியான பொதுவான சில கேள்விகளும், அதற்கான பதில்களும்....

• ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதா?

ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லது. ஆண்களுக்கு இடது கண் துடிப்பது அதிர்ஷ்டத்தைக் குறிப்பதாகும்.

• மகுடியோகம் என்றால் என்ன?

 மகுடியோகம் என்பது வாழ்வின் முன்பகுதியில் துன்பங்களை அனுபவித்து பின்பகுதியில் சிறப்பான உயர்வை தரும் யோகமாகும்.

• திருமண பொருத்தம் இல்லை எனில் பரிகாரம் செய்யலாமா?

திருமண பொருத்தம் இல்லை எனில் பரிகாரம் செய்யக் கூடாது. ஜாதக ரீதியான பாவ புண்ணிய பலன்களை மட்டுமே ஜாதகர் அனுபவிப்பார்.

• அமாவாசை தர்ப்பணம் என்பது தாயாருக்கா அல்லது தந்தையாருக்கா? தந்தை உள்ளார் ஆனால் தாயார் இல்லை தர்ப்பணம் செய்யலாமா?

அமாவாசை தர்ப்பணம் என்பது தந்தைக்கு மட்டுமே. தாய்க்கு ஈமக்கிரியை செய்தால் வருடாந்திர சிரார்த்தம் செய்யலாம். மாதந்திர தர்ப்பணம் செய்யக் கூடாது.

• உடன் பிறந்த அக்கா பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க வேண்டுமா?

திருமணம் எனும்போது ஆணின் ஜாதகமும் பெண்ணின் ஜாதகமும் பாவக ரீதியாக பொருத்தம் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். உடன் பிறந்த அக்கா பெண்ணை திருமணம் செய்ய இருப்பவர்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு திருமண பாவக பலன் நன்றாக உள்ளதெனில் செய்யலாம். பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்ய வேண்டாம். 

No comments:

Post a Comment