ஜாதகங்களில் கிரகங்கள் அமைகின்ற தன்மையாலும் அவற்றுள் ஒன்றுக்கொன்று ஏற்படுகின்ற தொடர்பாலும் யோகங்கள் உண்டாகின்றன. அவற்றில் சுபயோகங்களும் உண்டு. அவயோகங்களும் உண்டு.
யவ்வன யோகம் :
இரண்டாம் அதிபதி ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானத்தில் பலம் பெற்றிருந்து இரண்டாமிடத்தையும் சுப கிரகம் சேர அல்லது பார்க்க உண்டாகும் யோகம் யவ்வன யோகமாகும். இதனால் தனதான்ய லாபங்களும், நாவன்மையால் புகழும், நல்ல குடும்ப வாழ்க்கையும், சுக போஜனமும் உண்டாகும்.
சௌரிய யோகம் :
மேலே கூறியபடி மூன்றாமாதி ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானம் பலம் பெற்றிருந்து மூன்றாமிடத்தை சுபர் சேர அல்லது பார்க்க உண்டாகும் யோகம் சௌரிய யோகமாகும். இந்த யோகம் படைத்தவர்கள் பராக்கிரமசாலியாகவும், எடுத்தக் காரியத்தை முடிக்கும் தீரனாகவும், நல்ல சகோதரம் உடையவனாகவும், புகழுடனும் இருப்பார்.
அம்புதி யோகம் :
மேலே கூறியபடி நான்காமிடத்திற்குரியவன் ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானத்தில் பலம் பெற்றிருந்து நான்கிலும் சுபக்கிரகம் இருக்க அல்லது பார்க்க ஆடையாபரண அலங்காரப் பிரியராகவும், வாகன சுகம், பந்து மித்திரர்களால் சௌக்கியம் உள்ளவராகவும், அரசர்களால் மதிக்கப்படத்தக்கவராகவும் இருப்பார், குளம், கிணறு, தர்ம சத்திரம் போன்றவை ஏற்படுத்தி நற்பெயரை அடைவார்.
No comments:
Post a Comment