Tuesday 20 February 2018

நந்திக்கு குறுக்கே போகாதீங்க!


கோவிலில் நந்தியை வழிபட்டு, அவரது அனுமதியை மானசீகமாகப் பெற்ற பின் தான், சிவனைத் தரிசிக்க வேண்டும் என்பது விதி. நந்தி என்பது தர்மத்தின் அடையாளம். அதாவது சிவனைத் தாங்கி நிற்பது தர்மம். அந்த தர்மத்தின் சின்னமே நந்தி. கடவுளின் அருகில் இருக்கும் தகுதி தர்மத்திற்கு மட்டுமே உள்ளது என்பதால் நந்தி மூலவரான சிவனை நோக்கியபடி இருக்கும். நந்திக்கும், சிவனுக்கும் இடையில் சென்றால் தர்மச் செயல்களை மீறுவதாகக் கருதப்படும். எனவே சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக் கூடாது.

No comments:

Post a Comment