உடலில் உள்ள மின்காந்த சக்தி, புருவங்களின் நடுவில் விசேஷமாக வெளிப் படுகிறது. இந்த இடத்தை 'ஞானக்கண்' 'ஆக்ஞா சக்கர ஸ்தானம்' என குறிப்பிடுவர். அதை தூண்டி விடுவதற்காக சந்தனம், குங்குமத்தை திலகமாக நாம் இடுகிறோம். 'திலம்' என்பது எள்ளை குறிக்கும். திலகம் என்பதற்கு 'எள் அளவுக்கு சிறிதாக வைப்பது' என்பது பொருள்.
மனம் ஏதாவது ஒரு விஷயத்தால் பாதிப்பு அடையும் போது, உஷ்ணத்தால் தலைவலி ஏற்படும். சந்தனம், குங்குமம் இடுவதால் தலை பாதிப்பு நேராமல் குளிர்ச்சி உண்டாகும். காளிதாசரின் 'மாளவிகாக்னி மித்ரம்' என்னும் காவியம் திலகத்தின் பெருமையை விளக்குகிறது.
பிறரைக் கவர சிவப்பு, செல்வத்திற்கு மஞ்சள், அமைதிக்கு வெள்ளை, முகத்தின் பொலிவிற்கு கருப்பு நிறத்தில் திலகமிட வேண்டும். திலகமிடும் விரலுக்கேற்ப பலன் மாறுபடும். வலது கை மோதிர விரல் மன அமைதிக்கும், நடுவிரல் ஆயுள் விருத்திக்கும், கட்டை விரல் மன வலிமைக்கும், ஆள்காட்டி விரல் மோட்சத்திற்கும் வழிவகுக்கும்.
No comments:
Post a Comment