எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்த பின்னரே தொடங்க வேண்டும். கணபதியின் வடிவம் கூறும் பொருளை அறிந்து கொள்ளலாம்.
சிறிய கண்கள் - கூர்ந்து கவனி.
பெரிய காதுகள் - நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை - பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய் - பேசுவதைக் குறை.
பெரிய தலை - பரந்த அறிவு, ஞானம் தேடு.
பெரிய வயிறு - செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத்தையும் ஜீரணித்து முன்னேறு.
No comments:
Post a Comment