விவேகானந்தர் காவி உடை, தலைப்பாகை அணிந்திருப்பார். ஒருமுறை ரயிலில் சென்ற போது அவருடன் இரண்டு ஆங்கிலேயர் பயணம் செய்தனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாதென நினைத்து, அவரது துறவுக்கோலத்தை கேலி செய்தனர்.
ஒரு ஸ்டேஷன் வந்தது. அங்கு நின்ற ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்த விவேகானந்தர் “குடிக்க தண்ணீர் எங்கே கிடைக்கும்?” என ஆங்கிலத்தில் கேட்டார்.
அந்த ஆங்கிலேயர்கள் அதிர்ந்து விட்டனர். “உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும், நாங்கள் கேலி செய்த போது, நீங்கள் ஏன் பேசாமல் இருந்தீர்கள்?” என்றனர்.
“நான் முட்டாள்களிடம் பேசுவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை” என்றார் சுவாமி. ஆங்கிலேயர்கள் தலை குனிந்தனர். ஆளைப் பார்த்து யாருடைய திறமையையும் குறைத்து எடை போடக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
No comments:
Post a Comment