மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல 'ஓம் நமசிவாய' என்ற வார்த்தையை மனதினிலேயே சொல்லிப் பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
இந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளிக்கொணரும் பிராண நாமம். 'ஓம் நமசிவாய' இது வேதத்தின் இருதயம். நம்மைப் புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை.
'ஓம் நமசிவாய' - நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளது. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது.
இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
ந என்பது நிலம், ம என்பது நீர், சி என்பது அக்னி, வா என்பது காற்று, ய என்பது ஆகாயம் சிவபிரான் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் கருப்பையான சிவபிரானின் அருளினைப் பெற்றுத்தரும். இந்தக் கருப்பையில் இருந்தே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்டது தான் அந்த "ஓம் நமசிவாய" என்ற சொல்.
• இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்துப் பயங்களையும் நீக்கும்.
• மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.
• மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.
• வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.
• 108, 1008 என ஆரம்பித்து பின் இந்த நாமத்தினை தனது மூச்சாக மாற்றி வாழ்பவர்கள் இன்றும் கணக்கற்றோர் உள்ளனர். இவையனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவையாகும்.
• கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுகின்றதாம்.
• 'ஓம்' என்ற வார்த்தையை அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சை முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.
• 'ஓம்' ஜபிப்பதால் உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்து மத பிரிவினருக்கு யோகா பயிற்சி மூலம் 'ஓம் நமசிவாய' ஜபிக்க வைப்பது உயர் ரத்த அழுத்த சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது. பொதுவாக நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.
• மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.
மந்திரங்கள் பிரிவிலும், தனிப்பட்ட முறையிலும் 'ஓம் நமசிவாய' மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. அப்படிப்பட்ட திருநாமத்தை நொடிக்கு நொடி சிந்தையில் கொண்டு வணங்குவோம்.
"தென்னாடுடைய சிவனே போற்றி"
"எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
No comments:
Post a Comment