வலோகத்தில் சிவனின் விடங்க லிங்கம் (மிகச்சிறிய லிங்கம்) இருந்தது. அது பூலோகத்தில் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார். ஆனால், இந்திரன் அதை தனது லோகத்தில் வைத்து வழிபட வேண்டுமென சிவனிடம் கெஞ்சிக் கேட்டான். அதை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் அவனிடம் கொடுத்து விட்டார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.
ஒருசமயம் இந்திரன், வாலாசுரன் என்பவனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாக அறிவித்தான். பூலோகத்தை ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, வாலாசுரனை அழிக்க இந்திரனுக்கு உதவினார். அதற்குப் பரிசாக விடங்க லிங்கத்தை கேட்டார்.
இந்திரனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நிஜமான விடங்க லிங்கத்துக்கு பதிலாக, முசுகுந்தனை ஏமாற்றி, வேறு ஆறு லிங்கங்கள் கொடுத்தான். இதை அறிந்த முசுகுந்தன், நிஜமான லிங்கத்தையும் சேர்த்து ஏழு லிங்கங்களை பெற்றார். இந்த லிங்கங்களை ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் முசுகுந்தன். இவை திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் உள்ளன.
திருவாரூர் - தியாகராஜர்
திருநள்ளாறு - நாகவிடங்கர்
திருக்காரவாசல் - ஆதிவிடங்கர்
திருக்குவளை - அவனிவிடங்கர்
நாகப்பட்டினம் - சுந்தரவிடங்கர்
திருவாய்மூர் - நீலவிடங்கர்
வேதாரண்யம் - புவனிவிடங்கர்
No comments:
Post a Comment