Saturday 24 February 2018

சீரடி சாய்பாபாவின் - அறிவுரைகள்

சீரடி சாய்பாபாவின் - அறிவுரைகள்

சாய்பாபா மக்களுக்கு உதவியது மட்டுமில்லாமல், மக்களுக்கு நல்ல அறிவுரைகளையும் கொடுத்துள்ளார்.

ஓவ்வொரு மனிதனும் கடவுளை அடைவதற்கு முயற்சி செய்கிறான். அப்போது பல கட்டங்களை தாண்டிச் செல்கிறான்.

மனிதன் உலகத்து பொருளின் மீது வைத்திருந்த ஆசையை அடக்கும் போது, அவன் முக்தி பெறுகிறான்.

மனிதன் பந்தபாசத்தை தவிர்க்கும் போது, விரக்தி அடைகிறான்.

மனிதன் ஆத்மாவை அறிந்து கொள்ளும் போது, அவன் தன்னைப் புரிந்து கொள்கிறான்.

மனிதன் உணர்வுகளைத் துறக்கும் போது, அவன் விசர்ஜனம் பெறுகிறான்.

மனிதன் உண்மையை நேசிக்கும் போது, அவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறான்.

மனிதன் மற்றவர்களுக்காக வாழும் போது, அவன் முதிர்ந்த மனப்பக்குவத்தை அடைகிறான்.

மனிதன் உடலையும் உள்ளத்தையும் அடக்கும் போது, அவன் தியானத்திலிருக்கிறான்.

மனிதன் தூய எண்ணத்தோடு செயல்படும் போது, அவன் அமைதியை நாடுகிறான்.

மனிதன் அமைதியான நிலையில் கடவுளை அடைவதற்கு ஒரு நல்ல குருவை தேடுகிறான்.

மனிதனுக்கு நல்ல குரு கிடைத்தவுடன், அவன் விவேகத்தை பெற்று கடவுளோடு இணைகிறான்.

மனிதன் என்பவன் உலகத்திலுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பிறகு கடவுளை நாடுகிறான்.

மனிதன் கடவுளை தேடும் போது அவனுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையான மனிதனை அறிந்து கொள்கிறான். இந்த உண்மையே மனிதனை கடவுளோடு இணைக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளே கடவுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்தில் இறைவனை புரிந்து கொள்கிறான்.

No comments:

Post a Comment