Wednesday 21 February 2018

நதியில் கிடைத்த முருகன்


மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய ஞானியார். முருக பக்தரான இவர், கார்த்திகை நட்சத்திரத்தன்று கழுகுமலை முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். காலப்போக்கில் முதுமை காரணமாக செல்ல முடியவில்லை. ஒருநாள் கனவில் முருகன், எழுமலையில் ஓடும் கவுண்டிய நதியில் தான் சுயம்பு (தானாக உருவாகும் சிலை) வடிவில் இருப்பதை தெரிவித்தார். இந்த சிலை அருகில், வள்ளி, தெய்வானை சமேத முருகனை பிரதிஷ்டை செய்தார். மயில் மண்டபம் கட்டப்பட்டது. மாதம்தோறும் கழுகுமலை சென்று வழிபட்டதால் ஞானியார் இக்கோவிலுக்கு 'மாதாந்தம் கோவில்' என பெயரிட்டார்.

இருப்பிடம்: மதுரை-உசிலம்பட்டி சாலையில் 50 கி.மீ., தூரத்தில் எழுமலை. அங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது.

No comments:

Post a Comment