Friday 23 February 2018

தீராத நோய்களை தீர்க்கும் மாவூற்று

தீராத நோய்களை தீர்க்கும் மாவூற்று

தேனி மாவட்டம் தெப்பம்பட்டி என்ற இடத்தில் உள்ளது, மாவூற்று வேலப்பர் கோவில். முருகப்பெருமான் ஆலயமாகத் திகழும் இத்தல இறைவனின் திருநாமமே ‘வேலப்பர்’ ஆகும். 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், மலைகள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. 

முன் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மருதம் மற்றும் மாமரங்கள் சூழ்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சமும் மாமரம் தான். கோவிலுக்கு தெற்கே உள்ள ஒரு மாமரத்தின் அடியில் வற்றாத நீரூற்று காணப்படுகிறது. இதில் இருந்து எப்பொழுதும் நீர் பொங்கி வழிந்தபடி இருக்கிறது. 

இந்த ஊற்றையே ‘மாவூற்று’ என்கிறார்கள். இதனாலேயே இத்தல இறைவன் ‘மாவூற்று வேலப்பர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல விநாயகர் ‘மாவூற்று விநாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த மாவூற்றுத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், தீராத நோய்களும், மனக்குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment