ராம, கிருஷ்ண அவதாரங்கள் ராவணனையும், துரியோதனனையும் தண்டிக்க ஏற்பட்டவை. ஒருவன் இன்ப நுகர்ச்சிக்காகவும், மற்றொருவன் காரணமே இல்லாமலும் சீதை, திரவுபதியைத் துன்புறுத்தினர். ராம கிருஷ்ணர்கள் இவர்களைக் காப்பாற்றினர்.
திரவுபதியை தங்கையாகவும், சீதையை மனைவியாகவும் கொள்கிறார் திருமால். இந்த இரண்டு நிலையிலும் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பளிப்பது மனிதனின் கடமை என்பதை அறிவுறுத்தும் வகையில் இந்த லீலைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்த இந்த நேரத்தில் இந்த தெய்வங்களை வணங்கி, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற மந்திரத்தை தினமும் சொன்னால், ராமருக்கு அனுமன் உதவ வந்தது போல், தக்க உதவி கிடைக்கும்.
No comments:
Post a Comment