ஜாதகங்களில் கிரகங்கள் அமைகின்ற தன்மையாலும் அவற்றுள் ஒன்றுக்கொன்று ஏற்படுகின்ற தொடர்பாலும் யோகங்கள் உண்டாகின்றன. அவற்றில் சுபயோகங்களும் உண்டு. அவயோகங்களும் உண்டு.
சுபயோகங்கள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாழ்ந்த நிலையை அடையமாட்டார்கள். காட்டில் வசித்தபோதிலும் ராமன் சக்ரவர்த்தி ராமனாகவே விளங்கினான் என்பதைக் கவனிக்க வேண்டும். இதைத் தான் யோக பலன் என்று சொல்ல வேண்டும்.
சத்ர யோகம் :
பஞ்சமாதிபரும், பஞ்சமஸ்தானமும் பலம் பெற்றிருந்தால் சிறந்த புத்திமானாகவும், மந்திரி பதவியடையக் கூடியவராகவும் மனைவி மக்களால் சுகம் நிரம்பியவராகவும் இருப்பார்.
அத்திர யோகம் :
ஆறுக்குடையவனும், ஆறாமிடத்தில் இருந்தால் சாகசமாகக் காரியங்களைச் செய்து வெற்றி பெறக் கூடியவராகவும், எதிரிகளை தோற்றோடச் செய்பவராகவும், தேகத்திடம், மனோதிடம், வாக்குதிடம் உள்ளவராகவும் இருப்பார். இவர்கள் குடும்ப வாழ்க்கையில் பொறுப்புடன் செயல்படுவர்.
களஸ்திர யோகம் :
ஏழாமிடமும், ஏழுக்குடையவன் பலன் பெற்றிருந்தால் மனைவியால் நிறைவு பெற்ற வாழ்க்கை அடைந்தவராகவும், எப்போதும் பந்துமித்திரர்களால் சூழப்பட்டவராகவும், தனவானாகவும், தன் தந்தையைவிடச் சிறந்த நிலையை அடைந்தவராகவும் இருப்பர்.
ஜாதகரின் கிரகங்கள் அமைகின்ற தன்மையை பொருத்து யோகங்கள் மாறுபடும். ஒருவருக்கு எந்த வயதில் யாரால் யோகம் உண்டாகும் என்று அவரவர் திசாபுத்தி, பலாபலன்களை வைத்துத் தான் கணிக்க முடியும்.
No comments:
Post a Comment