திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை.
திருமணத்தடை நீங்க இங்கு வந்து மூலவரை வேண்டிக்கொள்பவர்கள் தடைபட்ட திருமணம் நடந்ததும் மீண்டும் இங்கு வந்து மூலவருக்கும் இறைவிக்கும் வேஷ்டி, பாவாடை எடுத்து வைத்து கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்துகின்றனர்.
பிள்ளை பேறு வேண்டும் தம்பதியினர் தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவன் இறைவிக்கு வெண்ணை காப்பு சாத்தி, புத்தாடை அணிவித்து கற்கண்டு பிரசாதம் விநியோகம் செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.
குழந்தை பேறு வேண்டும் பக்தர்களையும், திருமணத்தடை விலக பிரார்த்தனை செய்யும் பக்தர்களையும் மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களின் மனக்குறைகளை களைவதில் இந்த கோகுல கிருஷ்ணனுக்கு நிகரில்லை என்பது உண்மையே.
No comments:
Post a Comment