Friday, 23 February 2018

காயம்பட்ட ஏழுமலையான்


திருப்பதியில் ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வான் தன் மனைவியுடன் பூந்தோட்டம் அமைத்தார். அவரின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையிலும் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டார். கர்ப்பிணி பெண் தனக்காக மண் சுமப்பதைக் கண்ட ஏழுமலையான் தொழிலாளி உருவத்தில் தோன்றி உதவி செய்தார். இதைக் கண்ட அனந்தாழ்வான் கோபமுடன், ''எங்களுக்கு யாரும் உதவ வேண்டாம். நாங்கள் மட்டுமே பெருமாளுக்கு தொண்டு செய்ய விரும்புகிறோம்,'' என மறுத்து, தன் கையில் இருந்த கடப்பாரையால் அடித்ததில், தொழிலாளியின் மோவாயில் காயம் உண்டானது. உடனே ஏழுமலையான் தன் உண்மை வடிவைக் காட்ட, அனந்தாழ்வான் தான் செய்ததை எண்ணி வேதனைப்பட்டதோடு காயத்திற்கு மருந்தும் இட்டார். இதன் அடிப்படையில் இப்போதும், திருப்பதியில் ஏழுமலையானுக்கு மோவாய் புண்ணுக்கு பச்சைக் கற்பூரம் சாத்துவர்.

No comments:

Post a Comment