Friday 23 February 2018

வாழ்வை உயர்த்தும் நற்செயல்கள்

வாழ்வை உயர்த்தும் நற்செயல்கள்

நம் முன்னோர்கள் நம்மை பின்பற்ற வலியுறுத்திய வாழ்வை உயர்த்தும் புண்ணிய செயல்களும், அதற்கான பலன்களும் என்னவென்று அறிந்து கொள்வோம்.

நாம் வாழ்க்கையில் செய்யும் நற்செயல்களின் புண்ணியமே நமக்கு நற்கதி தரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்றைய அவசர உலகத்தில் அப்படிப்பட்ட நல்ல செயல்கள் செய்வதை விட, தவறான செயல்களைத் தவிர்ப்பதே பெரும்பாடாய் உள்ளது. நம் முன்னோர்கள் நம்மை பின்பற்ற வலியுறுத்திய வாழ்வை உயர்த்தும் புண்ணிய செயல்களும், அதற்கான பலன்களும் என்னவென்று அறிவோமா?

வீட்டில் துளசி வளர்ப்பது - பாவம் நீங்குவதுடன், உடல் ஆரோக்கியமும் தரும்.

கல்விக்கு உதவுவது - புத்திர பாக்கியம் தருவதுடன், நாட்டையும் உயர்த்தும்.

கோவில் கட்டுதல் - பிறப்பற்ற நிலையைத் தருவதுடன், ஆன்மிகமும் வளரும்.

குளம் வெட்டுவது - கடன்கள் தீருவதுடன் தண்ணீர்ப் பஞ்சமும் தீரும்.

விரதம் இருப்பது - உடல், மனத் தூய்மை பெறுவதுடன் மனக் கட்டுப்பாடும் அதிகரிக்கும்.

சுமங்கலி பூஜை - சவுபாக்கியம் பெருகுவதுடன் சந்தோசம் தரும்.

மரம் வளர்த்தல் - லட்சுமி கடாட்சம் ஏற்படுவதுடன் மழையும் பொழியும்.

தர்மம் செய்தல் - சித்தப் பிரமை நீங்குவதுடன், ஏழைகளின் பசியும் நீங்கும்.

யாகம் நடத்துதல் - பாவங்கள் விலகுவதுடன் ஒற்றுமை பெருகும்.

பசு பராமரிப்பினால் - நம் குழந்தைகள் நலமுடன் வாழ்வர்.

முன்னோர் வழிபாடு - சகல சவுபாக்கியம் கிடைப்பதுடன் வாழ்வில் நிம்மதி தரும்.

மேலும் கோவிலை சுத்தம் செய்வதால் கடவுள் அருள் கிட்டும் என்றும், மந்திரங்களை மனப்பாடம் செய்தால் செல்வம் கிட்டும் எனவும் பலவிதமான நற்செயல்களை ஆன்றோர்கள் நம் வாழ்வு உயர வகுத்து வைத்துள்ளனர். இவைகளில் நம்மால் முடிந்தவற்றை செய்து நாமும் வாழ்வில் உயர்வோம்.

No comments:

Post a Comment