Monday, 26 February 2018

அனுமனைப் போல் வாழ்வோம்


விவேகானந்தர் அனுமனைப் பின்பற்றி மக்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார். “மகாவீர அனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவர் ராமபிரானின் உத்தரவுப்படி கடலையும் தாண்டிச் சென்றார். அவருக்கு வாழ்வையும், சாவையும் பற்றிய கவலை சிறிதும் இல்லை. அவர் தன் புலன்களை முற்றிலும் அடக்கி ஆட்சி செய்தார். அற்புதமான புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் அவர் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார்.

இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் உலகையே பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வதிலும் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. ராமசேவையைத் தவிர மற்ற அனைத்தையும் அறவே புறக்கணித்தார்.

பிரம்மலோக பதவியையோ, சிவலோகப் பதவியையோ கூட அவர் பெரிதாக கருதாமல் வேண்டாம் என்று ஒதுக்கினார். அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய்வது மட்டுமே.

முழுமனதோடுஅர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு செய்யும் சேவையே அனுமனிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.”

No comments:

Post a Comment