Monday, 26 February 2018

இந்த நட்சத்திரக்காரர்கள் எண்ணியதை சாதிக்கக்கூடியவர்கள்!

kumbam

ராசிகளில் பதினொராவது இடத்தை வகிக்கும் கும்ப ராசியில் வரும் ஒரு நட்சத்திரமே சதயமாகும். இந்த நட்சத்திரம் உள்ளவர்களின் பொதுவான குணங்களும், நான்கு பாதங்களில் பிறந்தவர்களின் குணநலன்களும் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

உண்மை, சத்தியம் தவறாதவர்கள். உண்மையை நிலைநாட்ட என்ன விலை கொடுக்கவும் தயங்காதவர்கள். விடாப்பிடி லட்சியத்தால் மற்றவர்களோடு கருத்து மோதல்களையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.

இவர்கள் கோபக்காரர்கள். ஆனால் அடுத்த கணம் தணிந்து விடுவார்கள். தற்பெருமை புகழ்ச்சி என்பது பிடிக்காது. இவர்களிடம் ஆயிரம் திறமைகள் இருந்தாலும், அதை வெளிபடுத்தத் தெரியாது.

பெரும்பாலும் முற்பகுதி வாழ்க்கை சோதனை களமாக அமைகிறது. வாலிபம் கடந்த பிறகுதான் வாழ்க்கை சிறக்கிறது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை. திருமணம் ஆகாமலேயே இருப்பவர்களும் உண்டு என்றாலும், தனக்கு அமையும் வாழ்க்கைத்துணை நற்குணங்கள் அமையப் பெற்றிருப்பார்கள்.

சதயம் முதல் பாதம் :

இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நன்னடத்தை உடையவர்களான இவர்கள் திடமான மனதுடன் இருப்பார்கள். விரும்பியதைச் செய்யக்கூடியவர்கள். கால்நடைகளால் இவர்களுக்கு லாபம் அடையவர். 

சதயம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருந்தாலும், இந்தக் குணங்களும் இவர்களிடம் இருக்கும். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய இவர்கள் பழிவாங்கும் குணம் கொண்டவர்கள். இறை நம்பிக்கை உடையவர்கள்.

சதயம் மூன்றாம் பாதம் :

காரிய சித்தி உள்ளவர்கள். பசி தாங்கமாட்டார். நற்குணங்களை உடைய இவர்கள் எதையும் விரும்பாதவர்கள். சேவை மனப்பான்மையும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இருப்பர். 

சதயம் நான்காம் பாதம் :

எண்ணியதை சாதிக்கக்கூடியவர்கள். நல்ல குணங்களை உடைய இவர்கள் சௌபாக்கியம் நிறைந்தவர்கள். கீர்த்தி உடையவர்கள். பொறுமையாகச் செயல்படக்கூடியவர்கள்.

No comments:

Post a Comment