
கம்பராமாயணத்தை கம்பர் ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். ராமாயணத்தில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், 'அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் துாணிலிருந்து வெளிப்பட்டு, 'கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனி சன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு இருக்கிறது, சக்கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.
No comments:
Post a Comment