Sunday 4 March 2018

ஆலய பலிபீடம் சொல்லும் சாஸ்திரம்

ஆலய பலிபீடம் சொல்லும் சாஸ்திரம்

எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக் கொள்ளும் இடமாக உருவகப்படுத்தவே கோவிலில் பலி பீடம் வைக்கப்பட்டிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித் தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான், நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

காமம், ஆசை, குரோதம் (சினம்), லோபம் (கடும்பற்று),மோகம் (கற்பு நெறி பிறழ்வு), பேராசை, மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை), மாச்சர்யம் (வஞ்சம்) எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக் கொள்ளும் இடமாக உருவகப்படுத்தவே கோவிலில் பலி பீடம் வைக்கப்பட்டிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடம் உள்ள கீழான செயல்களை சிறந்த இடம் பலிபீடமாகும். இங்கு மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும். மற்றவர்கள் நினைப்பது போல உயிர் பலி கொடுக்கப்படும் இடம் அல்ல ‘பலிபீடம்’.

No comments:

Post a Comment