Saturday 3 March 2018

எப்போதும் வெற்றிமுகம்


ராமரை வெல்லும் நோக்கில் "மயில் ராவணன்' என்னும் அசுரன் மூலம் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான் ராவணன். இதனால் ராமருக்கு ஆபத்து நேரும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுக்க ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் வேண்டினான். அதன்படி புறப்பட்ட ஆஞ்சநேயருக்கு நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன் ஆகியோர் தங்களின் சக்தியை அளிக்க முன் வந்தனர். இதன் பின் நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன், அனுமன் ஆகிய ஐந்து முகம் கொண்டவராக விஸ்வரூபத்தில் தோன்றி, மயில் ராவணனை அழித்தார். வெற்றி, செல்வ வளத்தை வாரி வழங்கும் இவரை "ஜய மங்கள ஆஞ்சநேயர்' என குறிப்பிடுவர்.

No comments:

Post a Comment