Sunday 4 March 2018

நான்கு முக அம்பிகை


பெண் தெய்வங்களில் நான்கு முகம் கொண்டவள் சிதம்பரம் தில்லைக்காளி. இவளை பிரம்ம சாமுண்டீஸ்வரி என்பர். சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவன் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிர தாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலை, தலையில் தூக்கி ஆடிய சிவன், இதே போல் உன்னால் ஆட முடியுமா?'' என கேட்க, நாணம் கொண்ட காளி மறுத்தாள். போட்டியில் தோற்ற அவளது வருத்தம் தீர பிரம்மா, அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடினார். நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், அவளும் நான்கு முகத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள்.

No comments:

Post a Comment