Sunday 4 March 2018

செல்லத்தம்மன் ஆன செண்பகத்தம்மன்


கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மதுரை மக்கள், தெய்வமாக வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர். செண்பகப்பாண்டியன் காலத்தில் இது அம்மன் கோயிலாகி விட்டது. 

கண்ணகியின் சிலை உக்கிரமாக இருந்ததால், அப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. கவலையடைந்த செண்பக பாண்டியனின் கனவில், சிவன் தோன்றி, அவ்விடத்தில் பார்வதியின் சிலையை அமைக்கச் சொன்னார். அதன்படி மன்னன், இங்கு அம்பாளை பிரதிஷ்டை செய்து, அவளைப் பிரதானமாக்கி கோயிலை மாற்றியமைத்தான். மன்னன் பெயரால், 'செண்பகத்தம்மன்' என்றழைக்கப்பட்ட இவளது பெயர் காலப்போக்கில் 'செல்லத்தம்மன்' என மருவியது.

No comments:

Post a Comment