Friday 2 March 2018

புத்திர பாக்கியம் அருளும் பரிகாரம்

புத்திர பாக்கியம் அருளும் பரிகாரம்

பித்ரு தோஷத்தின் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி தவிப்பவர்கள் அரச மரத்தை சுற்றி வந்து வணங்குவதால் உடனடியாக புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சோமவாரம் எனும் திங்கட்கிழமையும், அமாவாசையும் சேரும் நாளை அமாசோமவாரம் என்று அழைப்பர். இந்த நாளில் அரசமரத்தை வலம் வந்து வணங்குவது நல்லது. இதற்கு ‘அமாசோமபிரதக்ஷிணம்’ என்று பெயர். அதுவும் மஹாளய அமாவாசையும் திங்கட்கிழமையும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமான ஒன்று. 

பித்ரு தோஷத்தின் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி தவிப்பவர்கள் இந்த நாளில் ஸ்நானம் செய்து ஈரத்துணியுடன் தீர்த்தக்கரையில் அமைந்துள்ள அரசமரத்தை 16 முறை சுற்றி வந்து வணங்குவதால் பித்ரு தோஷம் நீங்கப்பெற்று உடனடியாக புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

அவ்வாறு சுற்றி வரும் போது 

“மூலதோ ப்ரஹ்ம ரூபாய...  
மத்யதோ விஷ்ணு ரூபிணே... 
அக்ரத: சிவ ரூபாய... 
வ்ருக்ஷ ராஜாயதே நம:” 

என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே சுற்றுவது நல்லது. 

‘மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாக காட்சியளிக்கும் மரங்களின் அரசனை வணங்குகிறேன்’ என்பது இதன் பொருள். 

ஜோதிட ரீதியாக குழந்தை பாக்கியத்தைத் தருகின்ற புத்திரகாரகன் என்றழைக்கப்படும் குரு பகவானுக்கு உரிய சமித்து ‘அரச சமித்து’ என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள்தான் என்றில்லை, பிள்ளைகளைப் பெற்றவர்கள் கூட தங்கள் பிள்ளைகள் நல்ல  ஆரோக்கியத்துடன் சத்புத்திரர்களாக வாழவேண்டும், வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் அன்றைய தினத்தில் அரச மரத்தைச் சுற்றி வந்து வணங்கலாம்.

No comments:

Post a Comment