Friday 2 March 2018

உபவாசமும் ஹரிகதையும்!



விஷ்ணு வழிபாட்டில் உபவாசம் என்னும் விரதமும், ஹரிகதை(பக்திக்கதை) கேட்பதும் முக்கியமானது. 'உபவாசம்' என்றால் 'பட்டினியாக இருத்தல்' என்ற பொருள் மட்டுமல்ல. 'கூட வசிப்பது' என்ற பொருளும் உண்டு. 

இறைவனுடன் வசிப்பது..அதாவது அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வசிப்பது தான் நிஜமான உபவாசம். மாதம் ஒருமுறை, நம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆரோக்கிய விதியைப் பின்பற்ற திருவோணம் அல்லது ஏகாதசியன்று விரதம் இருக்க வேண்டும். உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும், அளவுக்கு மீறி சாப்பிடும் போது, அதுவே வயிற்றுக்கு எதிரியாகி, பல வியாதிகளுக்கு காரணமாகிறது. 

இந்த அறிவியல் காரணத்துக்காகவும் விரதம் பயன்படுகிறது. மற்றொரு செயல், பக்திக்கதை கேட்பது. பிரகலாதன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயணனின் கதையைக் கேட்டதால் தான் பக்தியில் சிறந்து விளங்கினான்.

No comments:

Post a Comment