ஸ்ரீதேவி: அம்ருதோத்பூதா கமலா சந்த்ரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச வராரோஹார்ங்க்ஞ்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவ தேவீ மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ.
மஹாலக்ஷ்மி ஸ்துதிமாலா
பொதுப் பொருள்:
செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையானவளே, அமிர்தம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உதித்தவளே, தாமரை மலரை விரும்பி ஏற்பவளே, சந்திரனின் சகோதரியே, திருமாலின் பத்தினியே, வைஷ்ணவியாய் அருள்பவளே, பக்தர்களின் நல் வாழ்வில் ஏற்படும் தடைகளை உன் கையில் உள்ள சார்ங்கம் எனும் வில்லால் அழிப்பவளே, தேவர்களுக்கெல்லாம் தேவியே, பேரழகுக் கோலத்தில் திகழ்பவளே, மஹாலக்ஷ்மியே, உனக்கு நமஸ்காரம்.
-இந்தத் துதியை மஹாலக்ஷ்மி திருவுருவப்படத்தின் முன் அமர்ந்து விளக்கேற்றி, தினமும் பதினாறு முறை பாராயணம் செய்து வர, தேவியின் அருளால் அவரவர்க்குப் பிடித்தமான துறையில் நல்ல வேலை கிடைக்கும்.
No comments:
Post a Comment