Tuesday, 12 September 2017

பிள்ளையார் நால்வர்


சின்னஞ்சிறு குழந்தைகளைப் பிள்ளை என்று அழைப்பார்கள். விநாயகப்பெருமான் சிவபெருமானுக்குப் பிள்ளை என்பதால் "ஆர்' என்பதைச் சேர்த்து இவர் "பிள்ளையார்' என்று போற்றி வணங்குகிறோம். இலக்கியங்களில் பிள்ளையார் என்று நால்வரைப் போற்றுகிறார்கள். விநாயகர் ஈசனின் முதல்பிள்ளை என்பதால் "மூத்த பிள்ளையார்' ஆனார். முருகப் பெருமானை இளையபிள்ளை என்பதால் "இளைய பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். சீர்காழியில் அவதரித்த ஞான சம்பந்தருக்கு "காழிப்பிள்ளையார்' என்று பெயர். சேய்ஞலூரில் பிறந்த சண்டிகேஸ்வரரை "சேய்ஞலூர் பிள்ளையார்' என்று இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த நால்வருமே சிவபெருமானுக்கு சம்பந்த முடையவர்கள். இவர்களை வழிபட்டால் வாழ்வில் அருளும் பொருளும் உண்டாகும்.

No comments:

Post a Comment