Monday 6 November 2017

தாலாட்டு பாடினாதான் "இந்த' சுவாமி தூங்குவாரு


வைத்தீஸ்வரன் கோயிலில் வீற்றிருக்கும் முத்துக்குமார சுவாமிக்கு (முருகன்) தினமும் இரவு 9 மணிக்கு புனுகு (பூனையிடமிருந்து கிடைப்பது), பச்சைக்கற்பூரம், சந்தனம் சாத்துவர். பால், பழம், பால்சோறு படைத்து தீபாராதனை செய்வர். இந்த தரிசனத்திற்கு "புனுகு காப்புத் தரிசனம்' என்று பெயர். தீபாராதனையின் போது கோயில் ஓதுவார் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் உள்ள பாடல் பாடி தாலாட்டுவார். அதன்பின்னரே, முருகன் தூங்கச் செல்வதாக ஐதீகம். இதன்பின், மூலவரான சிவன் வைத்தியநாதருக்கும், அம்பிகை தையல்நாயகிக்கும் அர்த்தஜாமபூஜை நடக்கும்.

No comments:

Post a Comment