Monday 6 November 2017

தாலாட்டு பாட்டில் கோயில் குளங்கள்


ஆதிசிதம்பரம் எனப்படும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் புதனுக்குரிய தலமாக விளங்குகிறது. ஆலமரம், கொன்றை, வில்வம் ஆகியவை தலவிருட்சங்கள். சோமதீர்த்தம், சூரியதீர்த்தம், அக்னி தீர்த்தம் என்று சிவனின் முக்கண்களும் பிரகாரத்தில் குளங்களாக விளங்குகின்றன. தாலாட்டுப்பாடல்களில், "முக்குளங்களில் நீராடி நற்கதி பெற வந்தானோ!'' என்று திருவெண்காட்டு தீர்த்தத்தைப் பாடி போற்றும் தாய்மார்கள் இப்பகுதியில் உண்டு. சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி ஆகிய சிவமூர்த்தங்கள் புகழ்மிக்கவை. ராமாயண காவியத்தில் கரதூஷண வதத்தில் இத்தல இறைவனின் பெருமை கூறப்பட்டுள்ளது. கல்வியை அருளும் புதனுக்கு தனி சந்நிதி உண்டு. ஞானம், வித்தையை அருள்பவளாக இருப்பதால் அம்பாளுக்கு, "பிரம்ம வித்யாம்பிகை' என்று பெயர். நல்ல அறிவும், பண்பும் உள்ள குழந்தைகளைப் பெற விரும்புவோர் புதன்கிழமைகளில், பிரம்மவித்யாம்பிகையை வழிபடுவது சிறப்பு. மாசி வளர்பிறையில் இக்கோயில் பிரம்மோற்ஸவத்தை, இந்திரன் நடத்துவதாக ஐதீகம்.

No comments:

Post a Comment