Monday 6 November 2017

சுக்கிரதிசை அடிச்சாச்சா


"அவனுக்கென்ன சுக்கிரதிசை அடிச்சிருக்கு!' என்று அதிர்ஷ்டசாலியை பாராட்டுவதுண்டு. காரணம், சுக்கிரனே ஒருவருக்கு உலக இன்பங்களை வாரி வழங்குபவர். அழகு, வசீகரம், சாதுர்யம், சங்கீதம், நடனம், ஆடம்பரம், சுகபோகம் ஆகியவற்றுக்கு அதிபதியாகத் திகழ்கிறார். ஒருவரது வாழ்வில் 20 ஆண்டு காலம் இவரது திசை ஒருவருக்கு நடக்கும். இதுவே ஒரு மனிதனின் வாழ்வில் அதிகபட்ச திசை காலம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சூரியனார் கோயில் அருகில் உள்ள கஞ்சனூர், பண்ருட்டி அருகில் உள்ள திருநாவலூர், திருத்தணி முருகன் கோயில் ஆகியவை சுக்கிரனுக்குரியவை. சூரியனார் கோயிலில் சுக்கிரனுக்கு தனி சந்நிதி உள்ளது. ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது. சுக்கிரதிசை நல்லபடியாக அமையவும் இந்தத் தலங்களுக்கு சென்று வரலாம்.

No comments:

Post a Comment