Monday 6 November 2017

ஜில்லுன்னு ஒரு ஜில்லிகா சேதி


பூவராஹமூர்த்தி இரண்யாட்சன் என்னும் அரக்கனை வதம் செய்து விட்டு வைகுண்டம் புறப்பட்டார். அவன் இறந்தபின், அவனுடைய மகளான ஜில்லிகை விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. அவள் முன் வராஹமூர்த்தியாக விஷ்ணு தோன்றி தரிசனம் அளித்தார். அவள் பெருமாளிடம் தன் வயிற்றில் இருக்கும் கருவுக்கு சாகாவரம் தருமாறு பிரார்த்தித்தாள். ""தேவர்களுக்குத் துன்பம் கொடுக்காத வரை உன் மகனுக்கு அழிவில்லை,'' என்ற வரத்தைக் கொடுத்தார் பெருமாள். ஆனால், ஜில்லிகையின் மகன் தண்டகனுக்கு பரம்பரை புத்தி போகவில்லை. தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். எனவே அவனை வராகமூர்த்தி கொன்றுவிட்டார். இருப்பினும், தன் பக்தையு ஜில்லிகைக்கு மோட்சம் கொடுத்து அருள்புரிந்தார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் அருகே ஜில்லிகா நற்கதி பெற்ற "ஜில்லிகாவனம்' உள்ளது.

No comments:

Post a Comment