Saturday 11 November 2017

நந்தோற்ஸவம்


சிறைச்சாலையில் தேவகியின் எட்டாவது பிள்ளையாக கண்ணன் பிறந்தான். அந்நாளையே "ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி' என்றெல்லாம் கொண்டாடுவர். வசுதேவர் குட்டிக்கண்ணனை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு யமுனை ஆற்றைக் கடந்து ஆய்ப்பாடியில் நந்தகோபர் வீட்டிற்கு கொண்டு போய்ச்சேர்த்தார். ஒருத்தி மகனாய் பிறந்தவன், ஓரிரவில் இன்னொருத்தி மகனாய் வளரத்தொடங்கினான். கண்ணன் ஆய்ப்பாடி வந்த விழாவினை "நந்தோற்ஸவம்' என்ற பெயரில் கொண்டாடுவர். கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் இவ்விழா வடமாநிலங்களில் சிறப்பாக நடக்கிறது.

No comments:

Post a Comment