Saturday 11 November 2017

இவரும் கிராமணி தான்


கிராமத்தில் தலையாரியாக இருப்பவரை அந்தக் காலத்தில் "கிராமணி' என்பர். "கிராமணி' என்றால் கிராமத்தலைவர். கிராமணியில் பரம்பரையில் பிறந்தவர்கள் தங்கள் பெயரோடு "கிராமணி'யைச் சேர்த்துக் கொள்வர். இதுவே பிற்காலத்தில் ஜாதிப்பெயராகவும் மாறி விட்டது. விநாயகருக்கும் "கிராமணி' என்ற பெயர் இருக்கிறது. ராகவ சைதன்யர் எழுதிய "மகாகணபதி ஸ்தோத்திரம்' நூலில் "கண க்ராமணீ' என்று குறிப்பிடுகிறார். சிவகணங்களின் தலைவராக இருப்பதால் விநாயகர் இப்பெயரால் குறிப்பிடப்படுகிறார்.

No comments:

Post a Comment