Thursday 8 February 2018

ஆமை மீது மலை


ஒருமுறை துர்வாச முனிவரின் கோபத்தால் இந்திரன் தனது செல்வங்களை இழந்தான். அந்த செல்வங்கள் பாற்கடலில் சென்று மறைந்தன. எனவே தேவர்கள் அசுரர்களுடன் இணைந்து பாற்கடலைக் கடைந்தனர். அந்த கடலை கடைய மத்தாகப் பயன்பட்ட மந்தரமலை நிலை குலைந்து சாய்ந்தது. அதை தாங்கிப் பிடிக்க, திருமால் ஆமை வடிவெடுத்து ஆழ்கடலுக்குள் சென்றார். அடுத்தவர்கள் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்த திருமாலின் தியாகம் கண்டு மந்தரமலை வியந்தது. அதற்கு நன்றிக்கடனாகத் திருமாலின் முதுகில் சுழலும் போது, சுமை தெரியாமல் சுகத்தையே பரிசாக அளித்தது. அதன்பின் இந்திரன் இழந்த செல்வங்கள் ஒவ்வொன்றாக கடலில் இருந்து வெளிப்பட்டன.

No comments:

Post a Comment