Monday 12 February 2018

மிகப்பெரிய லிங்கங்கள்


எந்த ஊர் லிங்கம் பெரியது எனக்கேட்டால், 'தஞ்சாவூர் பெரிய கோவில் லிங்கம்' என்று தான் பதில் வரும். உண்மையில், தஞ்சாவூர் கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனை விட, அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்டசோழபுரத்தின் லிங்கமே அதிக உயரமுள்ளது. தஞ்சை கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் கோவில் லிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் (பீடம்) 82.5 அடி சுற்றளவு கொண்டது. இது தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விட பெரியது.

No comments:

Post a Comment