திருநல்லூர் திருத்தலத்தில் உள்ள கார்கோடேஸ்வரரை வழிபாட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திருவையாறுக்கு அருகே உள்ளது ரதிவரபுரம் என்னும் திருநல்லூர் திருத்தலம். இங்கு கார்கோடேஸ்வரர் என்ற திருநாமத்தில் ஈசன் அருள்பாலித்து வருகிறார். பாம்புகளின் அரசனான கார்கோடகன், இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு கார்கோடேஸ்வரர் என்று பெயர் வந்ததாம்.
இறைவனின் திருநாமம் காமரசவல்லி. மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி, அவனது மனைவி ரதி தேவி இத்தல இறைவியை வழிபட்டதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தன் கணவனின் உயிரைத் திருப்பித்தர வேண்டி கடும் தவம் செய்த ரதி தேவிக்கு, சிவபெருமான் அருள் செய்த திருத்தலம் இதுவாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும், திருமானூர் என்ற இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், ஏலாக்குறிச்சி என்ற இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.
No comments:
Post a Comment