Sunday 11 February 2018

பிள்ளையை காக்கும் பிட்டாபுரத்தாள்


குழந்தைகள் தீராத நோயால் தவித்தால், திருநெல்வேலியிலுள்ள பிட்டாபுரத்தம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம். நெல்லையப்பர் கோவிலுக்கு வடக்கே அமைந்துள்ள இந்த கோவிலை பேச்சு வழக்கில் புட்டார்த்தியம்மன் என்று அழைப்பார்கள். இந்த அம்மனுக்கு பிட்டு நைவேத்யமாக படைக்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு 64 வகையான நோய்களுக்கு வேர் கட்டி மையிடுவார்கள். குழந்தைபாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும் இந்த அம்மனை வணங்குவார்கள். குழந்தை பிறந்த அன்று கூட இந்த கோவிலுக்குள் கொண்டு வரலாம் எந்த தீட்டும் கிடையாது. ஆடி கடைசி செவ்வாயன்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த கோவிலில் தேர்த்திருவிழா முடிந்த பிறகே திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா துவங்குவது மரபாக உள்ளது.

No comments:

Post a Comment