Sunday, 4 February 2018

நைவேத்யத்தை விட உயர்ந்தது எது ?


கோவிலில் அபிஷேகம், பூஜை, திருக்கல்யாணம் போன்றவை நடப்பது ஏன் தெரியுமா. கோவிலில் எது செய்யப்பட்டாலும், அது சமூக நன்மைக்கே உரியது. 'நாம்' இறைவன் உருவாக்கிய சமூகத்தின் ஒரு பங்கு என்பதை உணர வேண்டும். பூஜை என்பது ஒருவருக்காக அல்லாமல், எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகிறது. தியாக உணர்வு என்னும் பாவனை அதில் கலந்திருக்கிறது. பூஜைகளுக்கு மிக ஆடம்பரமாக செலவழிக்க வேண்டும் என்பதில்லை. கடவுள் எதைக் கொடுத்தாலும், எப்படிக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார். அது கொடுக்கப்படும் போது மனதில் இருக்கும் உணர்வு தான் முக்கியமானது. நல்லவரான விதுரர் கொடுத்த பழத்தோலைக் கூட கிருஷ்ணர் ருசியாக இருக்கிறது என சொன்னார். நைவேத்யத்தை விட அதைக் கொடுக்கும் பக்தி மனமே இறைவனுக்கு முக்கியமாகிறது.

No comments:

Post a Comment