Saturday 17 February 2018

மூன்று ஜெகந்நாதர் கோவில்கள்


பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர் ஆகியோர் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டி 12 ஆண்டு கால தவத்தை துவக்கினர். விதிவசத்தால் அவர்களின் தவம் ஆறு ஆண்டுகளே நீடித்தது. எனவே, சுவாமி அவர்களுக்கு முழுமையாகக் காட்சி கொடுக் காமல், பாதியளவு திருமேனியுடன் காட்சி தந்தார். ஜெகந்நாதர் என பெயர் பெற்ற இவர், ஒரிசாவிலுள்ள பூரி தலத்தில் பாதியளவு மூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த தரிசனத்தால் வருத்தமடைந்த முனிவர்கள் பெருமாளின் முழுத்திருமேனியைக் காண, பிரம்மாவின் ஆலோசனைப்படி பூலோகம் வந்து தவமிருந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சுவாமி, முழு வடிவத்துடன் காட்சி தந்தார். இவர் சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியிலுள்ள திருமழிசையில் அருளுகிறார். 

இந்த ஜெகந்நாதரே, சகுந்தலையின் வளர்ப்புத்தந்தையான கண்வ மகரிஷிக்கு ராமநாதபுரம் அருகிலுள்ள திருப்புல்லாணி என்னும் திவ்யதேசத்தில் காட்சி தந்தார். இம்மூன்று தலங்களிலும் மகாவிஷ்ணு, ஜெகந்நாதப்பெருமாள் என்ற திருநாமத்துடன் அருளுகிறார். பூரி தலம் உத்தர (வடக்கு) ஜகந்நாதம் என்றும், திருப்புல்லாணி தட்சிண (தெற்கு) ஜகந்நாதம் என்றும், திருமழிசை மத்திம ஜகந்நாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment