Sunday 11 February 2018

சிவராத்திரியில் சிவனை வழிபடும் நாகராஜா

சிவராத்திரியில் சிவனை வழிபடும் நாகராஜா

சிவராத்திரியில் சிவனாருக்கு நடக்கும் நான்கு கால பூஜைகளிலும் நாகராஜர்கள் சிவபெருமானை வழிபட்டுச் செல்வதாக ஞானநூல்கள் சொல்கின்றன.

சிவராத்திரியில் சிவனாருக்கு நான்கு கால பூஜை நடைபெறும். இந்த நான்கு காலங்களிலும் நாகராஜர்கள் சிவபெருமானை வழிபட்டுச் செல்வதாக ஞானநூல்கள் சொல்கின்றன.

முதல் காலத்தில், குடந்தைக் கீழ்க்கோட்டமான குடந்தை ஸ்ரீநாகநாதசுவாமி ஆலயத்திலும், 2-ம் கால பூஜையில் திருநாகேச்சுவரத்திலும், 3-ம் கால பூஜையின் போது நாகப் பட்டினத்திலும், 4-ம் கால பூஜையின் போது நாகூர் நாகநாத சுவாமி ஆலயத்திலும் நாகராஜர்கள் வழிபட்டுச் செல்வதாக ஜதீகம்.

சிவராத்திரி தினத்தை ஐந்தாம் நாளாகக்கொண்டு காளஹஸ்தியில் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி நாளன்று வெள்ளி இடப வாகனத்தில் பவனி வரும் சுவாமியைத் தரிசிப்பதும், வழிபடுவதும் பெரும் புண்ணியம் தரும்.

சிவராத்திரியின் மூன்றாம் காலத்துக்கு லிங்கோற்பவ காலம் என்று பெயர். இவ்வேளையில் பெருமானுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்தல், தாழம்பூ சூட்டுதல், கம்பளி ஆடைகளை அணிவித்தல் ஆகியவை சிறப்பான பலனைத் தருகின்றன. சிவராத்திரியில் கம்பளி ஆடைகளை நெய்யில் தோய்த்து அணிவிக்கின்றனர். இதற்கு கிருத கம்பள பூஜை என்று பெயர்.

No comments:

Post a Comment