Thursday 15 February 2018

எங்கிருக்கிறார் மாத்ருபூதம் ?


தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பார்கள். இதனை நிலைநாட்டும் விதத்தில் சிவனே தாயாக அருள்புரியும் தலம் திருச்சி. இத்தலத்திலுள்ள சிவன், ரத்னாவதி என்னும் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அவளுக்கு தாய் போல உதவியவர் என்பதால் 'தாயுமானவர்' எனப் பெயர் பெற்றார். சமஸ்கிருதத்தில், 'மாத்ருபூதேஸ்வரர்' என்று அழைப்பர். மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் இவரை நினைத்தாலே உள்ளம் குளிர்வதாக ஞான சம்பந்தர் தேவாரத்தில் போற்றியுள்ளார். சாரமா முனிவர் நாகலோகத்திலுள்ள மலர்களால் தாயுமானவரைப் பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. சிவனின் 64 வடிவங்களில் ஒன்றான கங்காளமூர்த்தியை இங்கு தரிசிக்கலாம். திரிசிரன் என்னும் அசுரன் இங்குள்ள சிவனை வழிபட்டதால், இவ்வூர் திரிசிரபுரம் என்றானது. பெருமாள் பள்ளி கொள்ள தேர்ந்தெடுத்த தலம் என்பதால் 'சிராப்பள்ளி' என்ற பெயரும் உண்டு. காலப்போக்கில் மருவி திருச்சிராப்பள்ளியாகி, திருச்சி என சுருங்கி விட்டது. 

No comments:

Post a Comment