Monday 12 February 2018

பிள்ளையாரின் தாத்தாக்கள் யார் ?


ஒருவருக்கு அம்மாவின் அப்பா, அப்பாவின் அப்பா என இரண்டு தாத்தாக்கள் இருப்பார்கள். பிள்ளையாரின் அம்மா பரமேஸ்வரி, தகப்பனார் பரமேஸ்வரன் இருவருமே பிறப்போ முடிவோ இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் பூமியில் பிறப்பெடுத்து அவதாரமாக வரும் போது தாத்தா, பாட்டிகள் எல்லாம் வந்து விடுவார்கள். அவ்வகையிலே சிவனுக்கு தாய், தந்தை இல்லை. அம்மா பூமியில் பல அவதாரங்கள் எடுத்தவள். அதில் முக்கிய அவதாரம் அவள் இமவான் (இமயமலை அரசன்) மகளாகப் பிறந்தது. அவளுக்கு எத்தனை பெயர் இருந்தாலும் 'பார்வதி' என்ற பெயர் தான் எல்லாருக்கும் தெரிந்தது. பர்வதத்தின் (மலை)மகள் என்பதே பார்வதி என்றானது. இதனால் தான் 'மலைமகள்' என்ற சிறப்பு பெயரும் வந்தது. எனவே பிள்ளையாருக்கு தாய் வழி பாட்டனார் இமவான் இருக்கிறார். ஆனால், தந்தை வழியில் பாட்டனாரே இல்லை. விநாயகருக்கு ப்ரவரம்(அறிமுகம்) சொல்லும் ஒரு ஸ்லோகத்தில் இந்த தகவல் இருக்கிறது. 'மாதா மஹ மஹாசைலம், மஹஸ்தத் அபிதாமஹம்' என்ற வரிகள் மூலம் இதை அறியலாம். இதற்கு அம்மா மலையின் மகள் என்றும், அப்பா 'அபிதாமஹம்' எனப்படும் தந்தையே இல்லாதவர் என்றும்பொருள்.

No comments:

Post a Comment