Wednesday, 7 February 2018

கோவிலில் தரும் கயிறை எத்தனை நாள் கையில் கட்டியிருக்கலாம்

கோவிலில் தரும் கயிறை எத்தனை நாள் கையில் கட்டியிருக்கலாம்

சில கோவில்களில் பிரசாதமாக சிவப்பு, மஞ்சள் கயிறு தருவார்கள். இந்த கயிறை கையில் கட்டியிருக்க சில விதிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.

காசி, திருப்பதி போன்ற கோவில்களிலும், இன்னும் சில அம்மன் கோவில்களிலும் கருப்பு கயிறு வாங்கி கட்டிக்கொள்கிறார்கள். 

சில கோவில்களில் பிரசாதமாக சிவப்பு, மஞ்சள் கயிறு தருவார்கள். அதனை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ..பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். அல்லது கோவில் மரத்தில் கட்டி விடுவது நல்லது.

அதற்கு மேல் அந்த கயிற்றை கையில் கட்டியிருந்தால் அதற்கு சக்தி இருக்காது. எனவே அதற்கு மேல் அந்த கயிற்றை கட்டியிருப்பது நல்லதல்ல.

No comments:

Post a Comment