Thursday, 15 February 2018

ஈசனின் வாகனம் எமன்

ஈசனின் வாகனம் எமன்

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் கோவில் அமைந்திருக்கிறது. அங்கே சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

மகாவிஷ்ணு இத்தலம் வந்து வாஞ்சிநாதரை வழிபட்டுதான், கோபத்தில் பிரிந்திருந்த தன் மனைவி மகாலட்சுமியோடு இணைந்தார். இந்த ஆலயத்தில் சிவபெருமானின் வாகனமாக எமதர்மராஜா இருக்கிறார். 

எனவே இத்தல மூர்த்தியை வழிபட்டால், எம பயம் நீங்கும், ஆயுள் கூடும் என்கிறார்கள். இங்குள்ள குப்த கங்கையில் நீராடினால், 9 நதிகளில் 90 முறை ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமாம். 

No comments:

Post a Comment